2020 ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
542 இணைப்பு நிலையங்கள் மூலம் 4,989 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 622,352 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். பாடசாலை பரீட்சார்த்திகள் 423,746 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 198,606 பேருமாக மொத்தம் 622,352 பேர் பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும், விண்ணப்பங்களை அனுப்பும்போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) மூலம் உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் குறித்த மாகாண மற்றும் வலய பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment