Ads (728x90)

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆசனங்களை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ட்ரூடோ மூன்றாவது முறையாகவும் கனடாவின் பிரதமராக பதவி  ஏற்கின்றார்.

பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 170 இடங்களை வெல்வது என்ற இலக்கை ட்ரூடோ அடையவில்லை. லிபரல் கட்சி பாராளுமன்றில் 158 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை பெற 338 இடங்களில் 170 இடங்களைப் பெற்றாக வேண்டும். கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ள போதிலும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 119 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

கனடா மக்கள் முற்போக்கான திட்டமொன்றை தெரிவு செய்துள்ளனர். உங்களுக்காக போராடும் உங்களுக்கானவற்றை செய்யும் அரசாங்கத்தை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை கென்சவேர்ட்டிவ் கட்சித் தலைவர் எரின் ஓடுல், இந்தத் தேர்தலை நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் நடவடிக்கை என்பதுடன் 600 மில்லியன் செலவில் நாட்டில் ஆழமான பிளவுகளின் மத்தியில் கனடா மக்கள் ட்ரூடோவிற்கு மற்றுமொரு சிறுபான்மை அரசாங்கத்தை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சியமைத்தது. 2023 ஆம் ஆண்டு அடுத்த தோ்தல் நடைபெறவேண்டிய நிலையில் அங்கு முன்கூட்டியே தோ்தல் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  

Post a Comment

Recent News

Recent Posts Widget