கல்வி அமைச்சினாலேயே பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்த அவர், அது தொடர்பில் அமைச்சினால் வழிகாட்டல்கள் கோரப்பட்டதற்கு அமைய குறித்த வழிகாட்டல்களை கையளித்துள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமாயின் அவரவர் தங்களுக்கு உள்ள பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment