Ads (728x90)

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 21 ஆம் திகதியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவை வழக்கம் போல் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்பின்பும் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க தீர்மானிக்கப்பட்டால் சிறப்பு அனுமதியுடன் குறைந்தபட்சம் ஒரு சில பேருந்துகளையாவது மாகாணங்களுக்கு இடையே இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அவ்வாறான பேருந்துகள் சில பாதுகாப்பு படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

அரச, தனியார் துறை ஊழியர்களின் பயணத்தேவைகளுக்காக இத்தகைய பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget