Ads (728x90)

எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைகளின் அதிபர்களை பொலிஸார் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளமை அபாயகரமான விடயம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பாடசாலை திறப்புகளை பெறுவதற்கு அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர். 

அமைச்சர் காமினி லொக்குகே உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் அதிபர்களுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு பொறுப்பாகவுள்ள பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸார் மூலம் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget