Ads (728x90)

வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய பதவிக்காலத்தில் வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கை அத்தனையும் எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். 

நான் வடமாகாண ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்து பணிகளை ஆரம்பித்து விட்டேன். எனது கடமைகளை கொழும்பிலிருந்து செயல்படுத்தி வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் ஆளுநராக செயல்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மாகாண பிரதம செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன். அடுத்த வாரம் யாழ்ப்பாணம் வருவேன் எனவும் கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget