நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினருக்கும் மற்றும் பொதுத்துறை ஊழியர்களில் பெரும்பாலானோருக்கும் கோவிட் தடுப்பூசி முழுமையாக போடப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு பொது சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறப்புத் தேவையுடையவர்களை கடமைக்கு அழைக்கக்கூடாது. அவர்களது சேவை அத்தியாவசியமாக தேவைப்படின் மாத்திரம் அழைக்க வேண்டும். அதன்போது அவர்கள் சேவைக்கு சமூகமளித்தல் மற்றும் புறப்படுவதற்கு சிறப்பு நேர ஒழுங்குகளை செய்ய வேண்டும்.
ஏனைய ஊழியர்களை கடமைக்கு அழைப்பது அமைச்சு மற்றும் திணைக்களத் தலைவர்களின் தீர்மானமாகும். கடமைக்கு அழைக்காத ஊழியர்கள் இணையவழியில் கடமைகளை வீட்டிலிருந்து செய்யவேண்டும்.
ஊழியர்கள் கடமைக்கு அறிக்கையிடல் வரவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டால் மாத்திரம் போதுமானது.
சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களை கடமைக்கு அழைப்பது சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பிரகாரமாகும்.
முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை அனைத்து ஊழியர்களும் பின்பற்றவேண்டும். அதற்காக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் திணைக்களத் தலைவர்களாவர்.
Post a Comment