நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருநு்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக இராணுவம் மற்றும் காவல்துறையினரால் பிரதான வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித்தடைகள் நீக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த இடங்களில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பேருந்துகளின் போக்குவரத்தும் மற்றும் வர்த்தக நிலையங்களும் வழமைக்கு திரும்பியுள்ளன.
Post a Comment