Ads (728x90)

வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் ஏற்றுக்கொள்ளல் நியதிகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட 100% எல்லை வைப்புத் தொகை கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

எதிர்வரும் ஆறு மாதங்களுக்கான நிதிக்கொள்கை அறிக்கை தொடர்பில் நேற்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் 100% நிதி வைப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தது.

குறித்த கட்டுப்பாடுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் செலாவணி வெளியேற்றத்தினை கருத்திற் கொண்டு எதிர்வரும் 06 மாதங்களுக்கு மிகையான இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டாமென அஜித் நிவாட் கப்ரால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள், வீட்டு மின்னுபகரணங்கள், ஆடைகள், தளபாடங்கள், டயர்கள், வாயுச் சீராக்கிகள், பழங்கள் ஒப்பனை பொருட்கள், மதுபானங்கள், உணவுகள், குடிபானங்கள், இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இதில் உள்ளடக்கபட்டிருந்தன.

அத்துடன் வர்த்தகர்கள் கடன் செலுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்க 15,000 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படுமென அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget