சட்டத்தின் மூலம் அனைத்தையும் செய்ய முடியும் என்று கூற முடியாது. அதன் அடிப்படையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சட்ட நடவடிக்கைகள் மூலமான அடக்குமுறைகள் ஊடாக தீர்வு காண முடியும் என்று நாம் நம்பவில்லை. கொவிட் தொற்று காரணமாக ஒன்றரை வருடமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையால் பாரதூரமாக கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் என்பன ஐக்கிய நாடுகளின் அமைப்பொன்றினால் பெயரிடப்பட்டுள்ளன. இது நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி சிறந்த தீர்மானமொன்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
Post a Comment