Ads (728x90)

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்ட புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 72 மணித்தியாலத்திற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று விசேட வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டுக்கு வருகை தரும் பிரஜைகள் கடந்த 03 மாத காலத்திற்குள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களாக இருந்தால் விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலயத்திற்கு முன்னர் அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுத்திருத்தல் போதுமானதாகும்.

முழுமையாகவோ தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஆங்கில மொழியில் அது தொடர்பான ஆவணத்தை வைத்திருத்தல் வேண்டும். அதேபோன்று பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகளை அறிக்கையையும் ஆங்கில மொழியில் வைத்திருத்தல் வேண்டும்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளதவர்கள் அல்லது முதற்கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளவர்கள் விமான நிலையத்திலும், இலங்கை பிரஜைகளாயின் அரச நிலையங்களிலும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று 07 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும்.

நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படும் இலங்கை பிரஜைகள், வதிவிட வீசா கொண்ட பிரஜைகள், இரட்டை குடியுரிமை கொண்ட பிரஜைகள் வீடுகளிலேயே சிகிச்சை பெறுவதற்கு தம்மை பதிவு செய்ய வேண்டும் என்பதோடு , பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கும் அறிவிக்க வேண்டும். 

கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெற்றுக்கொள்ளாத வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவர்கள் சிகிச்சைக்காக வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget