Ads (728x90)

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழகங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக நவம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.  

பல்கலைகழகங்களை திறக்கும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பல்கலைகழங்களின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் போட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத மாணவர்களுக்கு அடுத்த வாரம் தொடக்கம் பல்கலைக்கழகங்களில்  தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget