Ads (728x90)

மாகாணங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நவம்பர் 01 ஆம் திகதி திங்கட்கிழமை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் உரிய நேர அட்டவணையின் பிரகாரம் சகல பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த தனியார் பஸ் சேவைகளையும் மீள ஆரம்பிப்பதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்து அமைச்சில்  நேற்று  நடைபெற்ற கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget