நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பக் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தற்போது உரிய மற்றும் உயர் பங்களிப்புடன் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில் நவம்பர் 08 ஆம் திகதி முதல் தரம் 10, 11, 12, 13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கிடைத்தமை பெரும் சாதனையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளைத் தொடர்ந்து தரம் 6 - 9 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பது மற்றும் எஞ்சியுள்ள பாடசாலை காலத்தை நிர்வகிப்பது, விடுபட்ட பாடத்திட்டங்களை முழுமைப்படுத்துவது, பரீட்சைகளை நடாத்துவதற்காக உரிய பிரிவுகளை திட்டமிடுவது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.
இவற்றை திட்டமிட்டு எஞ்சியுள்ள பாடசாலை கால எல்லைக்குள் சரியாக செயற்படுவதன் மூலம், 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான இலக்குகளை அடைய முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment