Ads (728x90)


ஒக்டோபர் 06ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள கோட்டக் கல்வி அலுவலகங்கள் முன்பாக தொடர் போராட்டங்களை நடாத்த ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்து 84 நாட்கள் கடந்தும், அரசு எந்த தீர்வையும் வழங்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திகதிகளை அரசு முன்மொழிகிறது. முதல்கட்டமாக ஆரம்பப் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சர் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்வை வழங்குவதன் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒரே வழி என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget