உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நேற்று இரவு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் அங்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலில் வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், இரு நாட்டு அரச வியாபார வேலைத்திட்டங்கள் குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவுடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தியாவிற்கு நலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தமது செயற்பாடுகள் அமையும் எனவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக தாம் செயற்படுவோம் எனவும் வடக்கின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவிடம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment