தமது சம்பள பிரச்சினை தொடர்பில் 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் பாடசாலைகளுக்கு செல்வது தொடர்பில் மாற்று தீர்மானத்தை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாவிட்டால் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப்போவதில்லை என இலங்கை அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டத்திற்கான வெற்றியைப் பெறாமல் அதனைக் கைவிட நாம் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சாதகமானதொரு தீர்வு வழங்கப்படும் வரை அதிபர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சீ.என்.லியனகே தெரிவித்துள்ளார்.
Post a Comment