Ads (728x90)

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க இளையோருக்கு வேலைவாய்ப்பு இன்மையே காரணம் என பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் யாழ்.மறை மாவட்ட பேராயரை நேற்று மாலை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. 500 தமிழ் பொலிசார் மாத்திரமே கடமையாற்றி வருகிறார்கள். மேலதிகமாக தமிழ் பொலிசார் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும்.

ஏனெனில் வடக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று பயிற்சி பெற பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வடக்கிலிருந்து பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு மொழிப் பயிற்சியும் வழங்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்தாக குறித்த சந்திப்பின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது யாழ். ஆயர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget