பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 2022 வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன் 93 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் தரப்புடன் இணைந்து கூட்டணி கட்சி எம்பிக்களும், எதிரணியை சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிக்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக எதிரணியில் ஜக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்பிக்கள் வாக்களித்தனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் எதிராக வாக்களித்தனர். இலத்திரனியல் வாக்களிப்பு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
Post a Comment