Ads (728x90)

தேசிய மட்டத்தில் அரச நிறுவனங்களின் வினைத்திறனான சேவையை மதிப்பீடு செய்யும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் யாழ்.மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

இத்துடன் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்குபற்றிய 14 யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும், யாழ்ப்பாணம், தென்மராட்சி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்கள் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய், கோப்பாய், கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன,

உடுவில் ,காரைநகர், சங்கானை, ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்கள் சிறப்பு விருதினையும், நெடுந்தீவு பிரதேச செயலகம் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளது .

இதுபற்றி கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ்.மாவட்ட செயலகம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருப்பதுடன் பங்குபற்றிய 14 பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றமை பொதுமக்களுக்கான சேவை வழங்கலில் சிறந்த அங்கீகாரத்திற்கான அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளமைக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget