Ads (728x90)

டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது அண்மைய விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாகவும் தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்துடனும் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget