தற்போது உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் 'இலத்திரனியல் கிராம அலுவலர் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன்கீழ் குடியிருப்பாளர் தரவுத் தொகுதி தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இக்கருத்திட்டத்தை 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த சமுதாய அடிப்படையிலான தரவுத் தொகுதியின் மூலம் நபரொருவரின் சமகால வதிவிடத்தை மிகவும் சரியான வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கமைய முன்னர் காணப்பட்ட குடியிருப்பாளர் பட்டியல் முறைமையின் தேவைக்கு தேசிய தரவுத் தொகுதியாக 'இலத்திரனியல் - கிராம அலுவலர்' கருத்திட்டத்தின் தரவுத் தொகுதியை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment