Ads (728x90)

2021 ஆம் ஆண்டுக்கான 70 ஆவது பிரபஞ்ச அழகிப் பட்டத்தை இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து பெற்றுள்ளார். 

70 ஆவது பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நேற்று முன்தினம் இஸ்ரேலின் ஈலாட்டில் உள்ள யுனிவர்ஸ் டோமில் நடைபெற்றது. இந்த பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 80 போட்டியாளர்கள் பல்வேறு கட்டங்களைத் தாண்டி இறுதி போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் சார்பாக சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து கலந்து கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மகுடம் சூட்டினார்.

இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் சந்து மொடல் ஆவார். ஹர்னாஸ் சந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை இந்தியாவிற்கு பெற்றுகு் கொடுத்துள்ளார். இவருக்கு முன்னர் சுஷ்மிதா சென் 1994 ஆம் ஆண்டும், லாரா தத்தா 2000 ஆம் ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் 2ஆம் இடத்தை மிஸ் பராகுவேயைச் சேர்ந்த நதியா பெரீராவும், 3ஆம் இடத்தை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லலேலா மஸ்வானே ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget