Ads (728x90)

இலங்கையின் வடபகுதியில் உள்ள தீவுகளில் முன்னெடுக்க இருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளிலேயே இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு குறித்த சீன நிறுவனம் தயாராக இருந்தது. இதற்காக அண்மையில் அமைச்சரவையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

மூன்றாம் தரப்பினரால் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டமையை கருத்திற் கொண்டு சினோ சோலர் ஹைப்ரிட் டெக்னாலஜி வேலைத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget