Ads (728x90)

நாட்டிற்கு வருகைத் தரும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பிசிஆர் சோதனையை முன்னெடுக்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா பிறழ்வான ஒமிக்ரோன் பல நாடுகளில் பரவலாக காணப்படுவதால் மீண்டும் ஒருமுறை பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என இலங்கை மருத்துவ சபையின் தலைவரான வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் தவிர அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கொவிட்-19 தொடர்பான விசேட நிபுணர் குழு பிசிஆர் சோதனையின் முக்கியத்துவம் கருதி அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget