Ads (728x90)

நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் இஞ்சி முதன்மையானது. பொதுவாக இஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் பொருள். 

ஏனெனில் இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்கவும், செரிமானம் சிறக்கவும், இரத்தம் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.

30 நாட்கள் தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து வருவதால் உங்கள் உடலில் உள்ள ஜி.ஐ. குழாய் சீராக நலன் பெற்று புத்துணர்ச்சி அடையும். எனவே வெறும் 1.2 கிராம் அளவு இஞ்சியை ஒரு மாத காலம் உட்கொண்டு வந்தாலே 50% செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

குமட்டல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சியை அப்படியே சாப்பிடுவது குமட்டலை தடுக்கும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உண்டாகும் காலை நேர உடல் சோர்வு அல்லது உடல்நலம் குன்றுதல் போன்றவற்றை சரி செய்யும்.  அதற்கு தினமும் 1.5 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து வந்தாலே போதுமானது

அன்றாட உணவில் இஞ்சியை சிறிதளவு சேர்த்து உட்கொள்வது தசை வலிகளை 25% அளவு குறைக்க செய்கிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலியை குறைக்கவும் செய்கிறது.

நீரிழிவு நோயாளிகள் தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உட்கொண்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை வெகுவாக குறைக்க முடியும். இது 10% வரை இதய நோய்கள் உண்டாகும் அபாயத்தையும் குறைக்கிறது.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் 45 நாட்கள் அன்றாட உணவு முறையில் 3 கிராம் அளவு இஞ்சியை சேர்த்து உண்டு வந்தால் கொலஸ்ட்ராலை கணிசமான அளவு குறைக்க முடியும். தினமும் 2 கிராம் அளவு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோயை தடுக்கும்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget