Ads (728x90)

ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கடவுளுக்கு உரிய  தினங்களாக இருக்கின்றன. அந்தவகையில் வெள்ளிக்கிழமையானது மகாலட்சுமிக்கு உரிய தினமாக கருதப்படுகின்றது.

உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் வழங்குபவள்.

ஒவ்வொரு வெள்ளியும் மகாலட்சுமியை வணங்கி வர துன்பங்கள் விலகி அவளின் அருள் கிடைப்பதோடு, ஒருபோதும் பணமும், தானியமும் குறையாத அருளை வழங்குவார்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கும்போது புளிப்பு சுவை கொண்ட உணவு பொருட்களை சாப்பிடவோ அல்லது பிரசாதமாக படைக்கவோ கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயாசமும், கீரையும் படைத்து வணங்கி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் பணப் பஞ்சம் தீரும் என்பது ஐதீகம்.

நாம் பொதுவாக இறை வழிபாட்டின் போது கற்பூரம் காட்டுவது வழக்கம். அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு கற்பூரம் காட்டி வணங்கும்போது முழுவீட்டிற்கும் காட்டினால் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

Post a Comment

Recent News

Recent Posts Widget