நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணியாற்றிய குறித்த இலங்கையர் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பிரியந்த குமார என்ற நபராவார்.
இக்கொடூர சம்பவத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தங்களது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடிக்கும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் குறித்த இலங்கை பிரஜை செயற்பட்டதாக அவர் பணிபுரிந்த தொழிற்சாலையிலுள்ள ஏனைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்குள்ளவர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் சடலத்தை எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment