நாட்டின் அந்நியச்செலாவணியில் முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்பல்களை ஊக்குவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா பணம் முறைசாரா வழிமுறைகளின் ஊடாக நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளிலிருந்து முறைசாரா வழிகளின் ஊடாக பணம் அனுப்புபவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பணத்தை அனுப்புகின்ற வங்கிக்கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவே வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நாட்டிற்குப் பணத்தை அனுப்புவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைசார் வழிகளையே தெரிவுசெய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் அளவை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதேவேளை வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் பணம் (டொலர்) அனுப்புவதை ஊக்குவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மூன்று கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படுகின்ற பணம் இம்மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக 10 ரூபாவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதை இலகுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன் இதுகுறித்து வங்கிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.
மூன்றாவதாக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோர் நன்மை அடையக்கூடியவகையில் அவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓய்வுதியத்திட்டம், காப்புறுதித்திட்டம், வங்கிக்கடன் பெறுவதை இலகுபடுத்தல் போன்றவை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து உண்டியல் போன்ற சட்ட விரோதமான முறைகளில் நாட்டுக்கு பணத்தை அனுப்புதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தப் பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.
Post a Comment