இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினர் இன்று காலை பங்களாதேஷை சென்றடைந்துள்ளனர். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய 05 நாடுகள் இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
இலங்கை அணியில் மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சிவநேஸ்வரன் தர்மிகா, உருத்திரகுமார் யோகிதா, ரகுதாஸ் கிருசாந்தினி, மரியநாயகம் வெலன்டினா ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்களில் தர்மிகா உதவி அணித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ்வணியின் பொறுப்பாசிரியையாக மகாஜனா கல்லூரி கால்பந்தாட்ட அணியின் பொறுப்பாசிரியை பத்மநிதி செல்லையா நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் தலைவராக விசாகா வித்தியாலய மாணவி இமேஷா வர்ணகுலசூரியவும், இரண்டாவது உதவி அணித்தலைவராக கேட்வே கல்லூரி மாணவி மாலிகா அமித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி எதிர்வரும் சனிக்கிழமை தனது முதலாவது போட்டியில் பூட்டானையும், 13 ஆம் திகதி இந்தியாவையும், 15 ஆம் திகதி நேபாளத்தையும் சந்திக்கும் இலங்கை அணி தனது கடைசிப் போட்டியில் பங்களாதேஷை 19ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. இறுதிப் போட்டி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Post a Comment