பிறப்பு முதல் இறப்பு வரையிலான சேவைகளை பெறும்போது மக்களின் சட்ட பூர்வ சேவைகளை இலகுவாக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது பிறப்பு சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்பு சான்றிதழ் என்றே கூறப்படும் எனவும், இச்சான்றிதழானது இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும் என்றும், தேசிய பிறப்பு சான்றிதழில் பிறப்பின்போது அடையாள இலக்கம் உள்ளடக்கப்படும் எனவும் பதிவாளர் நாயகத்தின் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக பாதுகாப்பான முறையில் அச்சிடப்படவுள்ள தேசிய பிறப்பு சான்றிதழில் இரகசிய குறியிட்டு அடையாளம், அதற்கான இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படும் பெற்றோரின் திருமண நிலை தொடர்பான விடயம் பிறப்பு சான்றிதழில் இருந்து அகற்றப்படுள்ளது. எனினும் பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தேசிய பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment