Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் யாழ். மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை  06 இலிருந்து 07 ஆக அதிகரித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 19 இலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget