Ads (728x90)

யாழ். போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்  பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்  பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதை அடுத்து இன்று முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்  பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு பீசிஆர் பரிசோதனை கட்டணமாக 6,500 ரூபா அறவிடப்படவுள்ளது.

இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் மருத்துவ செலவுகளுக்காக உரிய கட்டணங்களை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செலுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget