Ads (728x90)

நாடளாவிய ரீதியில் இன்று முதல் இரண்டு கட்டங்களில் 01 மணித்தியாலம் 45 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய இன்று பி.ப. 2.30 - பி.ப. 6.30 மணிக்கு இடைப்பட்ட வேளையில் 01 மணித்தியால மின் வெட்டும், பி.ப. 6.30 - இரவு 10.30 மணி வரை 45 நிமிட மின் வெட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

மின்நிலையங்களிலுள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு போதிய எரிபொருள் மின்சார சபையிடம் இல்லாமை காரணமாக சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று முதல்  மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget