Ads (728x90)

யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவர்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த பல மாதங்களாக செயழிழந்து இருக்கும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறு கோரியே இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் பல்கலைகழக ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்நுழைய முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதனையடுத்து துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும், பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவர்களிடம் தெரிவித்தார்.

எனினும் மாணவர்கள் எழுத்தில் முன்வைத்த கோரிக்கை 04 மாதங்களாக எடுக்கப்படவில்லை என கூறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget