நாட்டிலுள்ள 06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநல சேவை நிலையங்களுக்கும் 250 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பசுமை விவசாயத்துக்காக விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் ஆகிய நோக்கின் அடிப்படையில் இந்த விவசாய இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்யும் இயந்திரங்கள், களை பறிக்கும் இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட 07 வகையான இயந்திரங்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.
Post a Comment