நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு இலட்சம் வேலைகள் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்ததாவது,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் யோசனைக்கமைய நாடுதழுவிய ரீதியில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க ஒரு இலட்சம் வேலைகள் அபிவிருத்தி திட்ட பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் வேலைகள் அபிவிருத்தி திட்டத்திற்காக 85 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தை 11 மாத காலத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது. இவ்வருட இறுதிக்குள் இப்பாரிய அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment