Ads (728x90)

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்றன.

தேசியக் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினரை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜனாதிபதிக்காக முப்படையினரால் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி உரையாற்றினார்.

நாடு எதிர்கொண்டுள்ள எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வதற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சட்ட ஆட்சியை பின்பற்றும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் நாடு என்ற வகையில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்ததில்லை எனவும் ஜனாபதி குறிப்பிட்டார்.

எவ்வித காரணங்களுக்காகவும் நாட்டில் மீண்டும் அடிப்படைவாதம் தலைத்தூக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்கு முன்னுதாரணமாக நடந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. முப்படையின் 319 வீரர்களும் ஏனைய 5,947 வீரர்களும் இம்முறை மரியாதை அணிவகுப்பில் பங்கேற்றனர். இலங்கை இராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகளும் ஏனைய இராணுவ வீரர்களும் மரியாதை அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget