Ads (728x90)

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நகரை சென்றடைந்தது. குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget