அங்கீகாரம் பெற்ற வருடாந்த விடுமுறை மற்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் கடமைக்கு செல்லாதிருக்க தீரு்மானித்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவை நிர்வாகம் சட்டபூர்வமற்ற சம்பள கொடுப்பனவில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீர்கேடுகளுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்காமையினால் விமானிகள் கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிர்வாகம் எழுத்து மூலமாக ஒப்புக் கொண்டிருந்தாலும் இதுவரையில் எந்த தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானிகள் மன்றம் தெரிவித்துள்ளது.
Post a Comment