இதன்படி இதுவரை 3,500 ரூபா உதவித்தொகை பெற்ற குடும்பம் ஒன்று 4,500 ரூபாயும், 2,500 ரூபா உதவித்தொகை பெற்ற குடும்பம் ஒன்று 3,200 ரூபாயும், 1,500 ரூபா பெற்ற குடும்பம் ஒன்று 1,900 ரூபாயும் உதவித்தொகையாகப் பெறவுள்ளன.
அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவை நாடு முழுவதும் உள்ள 17 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுக்காக 50 ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த அதிகரிப்பின் மூலம் அரசுக்கு மேலதிகமாக 15 ஆயிரம் மில்லியன் ரூபாயை செலவிட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment