குறைந்த பட்ச பேருந்து கட்டணமாக இருந்த 20 ரூபா, 27 ரூபாவாக இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த கட்டண அதிகரிப்பு தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பல பிரதேசங்களில் பேருந்து உரிமையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சில பகுதிகளில் தனியார் பேருந்துகள் தமது சேவையை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment