Ads (728x90)

உடன் அமுலுக்கு வரும் வகையில் றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

றம்புக்கணை பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

றம்புக்கணையில் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் 08 பேர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை றம்புக்கனையில் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி உறுதிப்படுத்தியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget