Ads (728x90)

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான Standard & Poor’s (S&P) தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

2023 ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால் தரப்படுத்தலில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயமுள்ள நாடு என்பதையே குறிக்கின்றது.

குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது என Standard & Poor’s நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget