கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்குவதற்கு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என தயாசிறி ஜயசேகரவும் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். வெளியிலிருந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்குவது இங்கு முக்கியமல்ல.
மேலும் இராஜாங்க அமைச்சுக்களை ஏற்றுக் கொண்டுள்ள ஷாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மத்திய குழு தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Post a Comment