Ads (728x90)

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உரப்பிரச்சினை காரணமாகவே இந்த நெருக்கடி ஆரம்பமானது என்றும் அது அரசாங்கத்தின் மீதான வெறுப்பாகவே தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.






Post a Comment

Recent News

Recent Posts Widget