எரிபொருள் விலை அதிகரிப்பினால் பஸ் கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தமை மற்றும் அரசாங்கத்தின் பொதுமக்கள் எதிர்ப்பு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு நாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் அதிபர், ஆசிரியர்களின் 30 தொழிற்சங்கங்கள் இணைந்துகொண்டன.
அதிபர், அசிரியர் சங்கங்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, ஆசிரியர்மாணவர் போக்குவரத்திற்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இன்று இடம் பெற்றது.

Post a Comment