Ads (728x90)

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தேசிய வைத்தியசாலையின் வைத்திய குடியிருப்பிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி லிப்டன் சுற்றுவட்டம் வரை பயணித்ததுடன், அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இணை சுகாதார மருத்துவபீட மாணவர் சங்கத்தினர் கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகிலிருந்து பேரணியாக சென்றவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் பிரவேசித்து தங்களின் எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். போதுமானளவு மருத்துகள் இன்மையால், நோயாளிகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கம்பளை ஆதார வைத்தியசாலையின் சுகாதார பிரிவு ஊழியர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மாவட்ட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு நாடளாவியரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget