இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிடும் கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை. அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்றின் ஊடாகவே தீர்வு பெற்றுக்கொள்ள முடியும். காலம் கடத்தும் செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பொதுஜன பெரமுனவின் 66 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளார்கள். அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கி புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இதுவரை முன்னேற்றகரமான வகையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்பதை உறுதியுடன் குறிப்பிட முடியும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment