Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திக்கானில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தயவுசெய்து நீதிக்காக, உங்களின் மக்களிற்காக இந்த சம்பவங்களிற்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக தெளிவுபடுத்துங்கள் என பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நாட்டிற்கு அமைதியையும், மனச்சாட்சியையும் கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராதனையின் போது பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget